ஆட்டோமொபைல்
ஹீரோ எக்ஸ்டிரீம் 160ஆர்

எக்ஸ்டிரீம் 160ஆர் லிமிடெட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்த ஹீரோ மோட்டோகார்ப்

Published On 2021-03-13 08:34 GMT   |   Update On 2021-03-13 08:34 GMT
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது எக்ஸ்டிரீம் 160ஆர் லிமிடெட் எடிஷன் மாடலின் விலை மற்றும் விற்பனை விவரங்களை அறிவித்து உள்ளது.


ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எக்ஸ்டிரீம் 160ஆர் 100 மில்லியன் எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 1,08,750 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் ரியர் டிரம் பிரேக் விலை ரூ. 1,03,900 என்றும் டிஸ்க் வேரியண்ட் ரூ. 1,06,950 ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

100 மில்லியன் எடிஷனில் டூயல் டோன் பெயின்ட் செய்யப்பட்டு இருக்கிறது. டூயல் டோன் பினிஷ் ஹெட்லைட் மாஸ்க், பியூவல் டேன்க் மற்றும் பின்புற பேனல்களில் தெளிவாக காட்சியளிக்கிறது. இதன் வெளிப்புற தோற்றம் எக்ஸ்டிரீம் 160ஆர் ஸ்டான்டர்டு மாடலை போன்றே காட்சியளிக்கிறது.



புதிய மாடலிலும் 163சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 15 பிஹெச்பி பவர், 14 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. எக்ஸ்டிரீம் 160ஆர் லிமிடெட் எடிஷன் டூயல் டிஸ்க் பிரேக் கொண்ட ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது.

இந்திய சந்தையில் ஹீரோ எக்ஸ்டிரீம் 160ஆர் மாடல் டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் 160 4வி மற்றும் பஜாஜ் பல்சர் என்எஸ்160 மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
Tags:    

Similar News