செய்திகள்
சரத்யாதவின் மகள் சுபாஷிணி யாதவ் காங்கிரசில் இணைந்த காட்சி

பீகார் சட்டசபை தேர்தலையொட்டி சரத்யாதவ் மகள் காங்கிரசில் சேர்ந்தார்

Published On 2020-10-14 23:28 GMT   |   Update On 2020-10-14 23:28 GMT
பீகார் சட்டசபை தேர்தலையொட்டி முன்னாள் மத்திய மந்திரியும், லோக்தந்திரிக் ஜனதாதள தலைவருமான சரத்யாதவின் மகள் சுபாஷிணி யாதவ், நேற்று காங்கிரசில் இணைந்தார்.
புதுடெல்லி:

பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக இம்மாதமும், அடுத்த மாதமும் நடக்க உள்ளது. இதையொட்டி, முன்னாள் மத்திய மந்திரியும், லோக்தந்திரிக் ஜனதாதள தலைவருமான சரத்யாதவின் மகள் சுபாஷிணி யாதவ், நேற்று காங்கிரசில் இணைந்தார். அவர் சமூக சேவகராக இருந்து வருகிறார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:-

என் தந்தை சரத்யாதவுக்கு உடல்நிலை சரியில்லாததால், அவரால் தேர்தலில் தீவிரமாக பங்கேற்க முடியவில்லை. ஆகவே, அவர் ஆதரித்த மகாகூட்டணியை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அவருடன், லோக் ஜனசக்தி கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி. கலி பாண்டேவும் காங்கிரசில் சேர்ந்தார். இருவரும் பீகார் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட ‘டிக்கெட்’ கேட்டுள்ளனர்.
Tags:    

Similar News