லைஃப்ஸ்டைல்
கோதுமை ரவை வெஜிடபிள் உப்புமா

கோதுமை ரவை வெஜிடபிள் உப்புமா

Published On 2019-07-02 05:03 GMT   |   Update On 2019-07-02 05:03 GMT
காலையில் சத்தான உணவுவை சாப்பிடுவது அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். இன்று கோதுமை ரவையும், வெஜிடபிள் சேர்த்து உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கோதுமை ரவை - ஒரு கப்,
பச்சைப் பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன்,
பீன்ஸ் - 10
கேரட், வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று,
கொத்தமல்லி - சிறிதளவு,
இஞ்சி - ஒரு சிறிய துண்டு,
கடுகு - கால் டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - ஒன்று,
முந்திரித் துண்டுகள் - ஒரு டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,  
எலுமிச்சைச் சாறு (விருப்பப்பட்டால்) - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.



செய்முறை :

கொத்தமல்லி, வெங்காயம், காய்கறிகள், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு கோதுமை ரவையை சிவக்க வறுத்து கொள்ளவும்.

அதே கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகை போட்டு வெடித்ததும் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரி, காய்ந்த மிளகாயை சேர்த்து சிவக்க வறுக்கவும்.

அடுத்து அதில் ப.மிளகாய், இஞ்சி, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் மற்றும் பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கவும்.

காய்கறிகள் நன்கு வதங்கியவுடன் மூன்று கப் தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

அடுப்பை ‘சிம்’மில் வைத்து வறுத்த ரவையை சிறிது சிறிதாக சேர்த்துக் கலக்கவும்.

மீதமுள்ள எண்ணெயையும் சேர்த்து, ரவை நன்றாக வெந்ததும் கிளறி கீழே இறக்கவும்.

கடைசியாக எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி சேர்த்து சூடாக பரிமாறவும்.

சூப்பரான கோதுமை ரவை வெஜிடபிள் உப்புமா ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News