ஆன்மிகம்
கிருஷ்ணன்

சேரமங்கலம் கிருஷ்ணன் கோவிலில் பட்டாபிஷேக விழா இன்று தொடங்குகிறது

Published On 2020-12-16 03:41 GMT   |   Update On 2020-12-16 03:41 GMT
மணவாளக்குறிச்சி அருகே சேரமங்கலம் கிருஷ்ணன் கோவிலில் பஜனை பட்டாபிஷேக விழா இன்று (புதன்கிழமை) தொடங்கி 19-ந் தேதி வரை நடக்கிறது.
மணவாளக்குறிச்சி அருகே சேரமங்கலம் கிருஷ்ணன் கோவிலில் பஜனை பட்டாபிஷேக விழா இன்று (புதன்கிழமை) தொடங்கி 19-ந் தேதி வரை நடக்கிறது. இன்று அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, மதியம் 1 மணிக்கு அன்னதானம், இரவு 7 மணிக்கு பஜனை, 7.30 மணிக்கு திருவிளக்கு பூஜை ஆகியவை நடைபெறும்.

நாளை காலை 6 மணிக்கு அகண்ட நாம ஜெபம், மாலை 6.30 மணிக்கு அகண்ட நாம ஜெபம் நிறைவு, இரவு 7 மணிக்கு பஜனை, 8.30 மணிக்கு உறியடி விழா ஆகியவையும், 18-ந் தேதி காலையில் தீபாராதனை, மதியம் அன்னதானம், இரவு 8.30 மணிக்கு மயில் ஆட்டம், 9 மணிக்கு பஜனை, 9.30 மணிக்கு பட்டாபிஷேகம் வீதி உலா வருதல் போன்றவையும் நடக்கிறது. 19-ந் தேதி காலையில் தீபாராதனையும், தொடர்ந்து சர்க்கரை பொங்கல் வழங்குதலும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.
Tags:    

Similar News