செய்திகள்
கோப்புப்படம்

மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் வெள்ளைப்பூண்டு விலை உயர்வு

Published On 2019-11-04 10:28 GMT   |   Update On 2019-11-04 10:28 GMT
மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் ஊட்டி வெள்ளைப்பூண்டு ஒரு கிலோ ரூ.200-ல் இருந்து ரூ. 250 வரையும், இமாசலபிரதேச வெள்ளைப்பூண்டு ஒரு கிலோ ரூ.150-ல் இருந்து ரூ.200 வரையும் விற்பனை ஆனது.
மேட்டுப்பாளையம்:

மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் உள்ள வெள்ளைப் பூண்டு மண்டிகளுக்கு ஊட்டி மற்றும் பிற பகுதிகளில் இருந்து வெள்ளைப்பூண்டு 750 மூட்டையும், இமாசலப்பிரதேசத்தில் இருந்து 700 மூட்டையும் விற்பனைக்கு வந்து இருந்தது. ஊட்டி வெள்ளைப்பூண்டு ஒரு கிலோ ரூ.200-ல் இருந்து ரூ. 250 வரையும், இமாசலபிரதேச வெள்ளைப்பூண்டு ஒரு கிலோ ரூ.150-ல் இருந்து ரூ.200 வரையும் விற்பனை ஆனது.

இதேபோல் ஊட்டி, திம்பம், குஜராத், ஆசன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து உருளை கிழங்குகள் விற்பனைக்கு வந்திருந்தது. ஊட்டி உருளைக்கிழங்கு 45 கிலோ ரூ.900-ல் இருந்து ரூ.1300, திம்பம் உருளைக் கிழங்கு 45 கிலோ ரூ.700-ல் இருந்து ரூ.700-ல் ரூ.1200-க்கும், குஜராத் உருளைக் கிழங்கு 45 கிலோ ரூ.750-ல்இருந்து 1050-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Tags:    

Similar News