செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது

Published On 2020-11-25 07:19 GMT   |   Update On 2020-11-25 07:19 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.36,800-க்கு விற்பனையானது.
சென்னை:

தங்கம் விலையில் சில வாரங்களாக ஏற்றத்தாழ்வு காணப்பட்டு வந்த நிலையில் கடந்த 21-ந்தேதி பவுன் மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது. அதன் பின் விலையில் தொடர்ந்து சரிவு காணப்பட்டு வருகிறது.

இன்று 3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது. நேற்று பவுனுக்கு ரூ.864 குறைந்து ரூ.37 ஆயிரத்து 120-க்கு விற்றது.

இந்தநிலையில் சென்னையில் இன்று காலை தங்கம் விலையில் பவுனுக்கு ரூ.320 குறைந்தது. இதனால் தங்கம் விலை ரூ.37 ஆயிரத்துக்குள் வந்தது.

இன்று காலை தங்கம் பவுன் ரூ.36 ஆயிரத்து 800-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.40 குறைந்து 4 ஆயிரத்து 600 ஆக உள்ளது.

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் தொடர்ந்து 3-வது நாளாக குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து ரூ.64 ஆயிரத்து 200 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.64.20-க்கு விற்கிறது.

Tags:    

Similar News