உள்ளூர் செய்திகள்
ரே‌ஷன் அரிசி

குடோனில் பதுக்கிய 34 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல்

Published On 2021-12-03 09:31 GMT   |   Update On 2021-12-03 09:31 GMT
செங்குன்றம் அருகே குடோனில் பதுக்கிய 34 டன் ரே‌ஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர்.
செங்குன்றம்:

ரே‌ஷன் கடையில் விநியோகிக்கப்படும் இலவச அரிசியை சிலர் வாங்கி கூடுதல் விலைக்கு விற்பதாகவும், ரே‌ஷன் அரிசியை ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் கடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

இந்த நிலையில் செங்குன்றம் அருகே உள்ள குடோனில் ரே‌ஷன் அரிசி பதுக்கிவைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் விரைந்து சென்று குடோனில் சோதனையிட்டனர்.

அங்கு மூட்டை மூட்டையாக ரே‌ஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 34 டன் ரே‌ஷன் அரிசி இருந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக செல்லப்பாண்டியன் என்பவரை போலீசார் கைது செய்தனர். ரே‌ஷன் அரிசி கிடைத்தது எப்பது? எங்கு கடத்தி செல்லப்படுகிறது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News