ஆன்மிகம்
பவானி கூடுதுறையில் புனித நீராட முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம்

பவானி கூடுதுறையில் புனித நீராட முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம்

Published On 2021-09-20 06:58 GMT   |   Update On 2021-09-20 06:58 GMT
கூடுதுறையில் பக்தர்கள் புனித நீரட மற்றும் திதி, தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டது. இந்த தடை கடந்த 6 மாதமாக நீடித்து வருகிறது.

ஈரோடு மாவட்டம் பவானியில் சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவிலை யொட்டி பவானி ஆறு, காவிரி ஆறு, அமுத நதி என மூன்று நதிகள் சங்க மிக்கும் கூடுதுறை ஆறு ஓடுகிறது.

பவானி கூடுதுறைக்கு ஈரோடு மாவட்ட மக்கள் மட்டுமின்றி சேலம், திருப்பூர், கோவை, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் வருவார்கள். மேலும் அமாவாசை, பவுர்ணமி மற்றும் விஷேச நாட்களில் வழக்கத்தை விட ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

கூடுதுறைக்கு வரும் பக்தர்கள் ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ்வரரை வணங்கி விட்டு செல்வார்கள். மேலும் பொது மக்கள் ஆற்றில் குளித்து விட்டு தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து விட்டு ஆற்று பகுதியில் உள்ள மரத்தடி விநாயகரை வழிபடுவார்கள்.

இதற்காக ஆற்று பகுதியில் படித்துறைகள் அமைக்கப்பட்டு உள்ளது. பெண்கள் மற்றும் ஆண்கள் குளிப்பதற்கு தனித்தனியே படித்துறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா ஆந்திரா, தெலுங்கானா மற்றும் வட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து ஆற்றில் குளித்து விட்டு சங்கமேஸ்வரரை தரிசனம் செய்வார்கள்.

வெளி மாநில பக்தர்கள் வசதிக்காக குளிக்கும் இடம், கழிப்பிடம் மற்றும் ஓட்டல்களில் கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளது.

இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கோவில்கள் மற்றும் நீர்நிலைகளில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டது. இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவில்கள் மற்றும் பவானி கூடுதுறை, பவானிசாகர் அணை பகுதியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதே போல் பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் கூடுதுறையில் பக்தர்கள் புனித நீரட மற்றும் திதி, தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டது. இந்த தடை கடந்த 6 மாதமாக நீடித்து வருகிறது.

இதனால் கூடுதுறைக்கு வரும் பக்தர்கள் புனித நீராட முடியாமல் ஏமாற்றம் அடைந்து செல்கிறார்கள். மேலும் அமாவாசை, பவுர்ணமி நாட் களில் தங்கள் முன்னோர் களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்க முடியாமல் செய்வது அறியாமல் தவித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News