தொழில்நுட்பம்
ஒப்போ

புதுவித செல்பி கேமரா அமைப்பிற்கு காப்புரிமை பெற்ற ஒப்போ

Published On 2021-02-19 04:08 GMT   |   Update On 2021-02-19 04:08 GMT
ஒப்போ நிறுவனம் புதுவித செல்பி கேமரா அமைப்பை பயன்படுத்துவதற்கான காப்புரிமையை பெற்று இருக்கிறது.


ஒப்போ நிறுவனம் வித்தியாசமான ஸ்மார்ட்போன் டிசைன் மற்றும் அம்சங்களை உருவாக்குவதற்கான பணிகளில் துவக்கம் முதலே ஈடுபட்டு வருகிறது. முன்னதாக ஒப்போ நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்க ஒப்போ காப்புரிமைகளை பெற்று இருந்தது. 

தற்சமயம் ஸ்லைடிங் செல்பி கேமராவிற்கான காப்புரிமையை ஒப்போ பெற்று இருக்கிறது. புதுவித செல்பி கேமராவிற்கான காப்புரிமையை பெற ஒப்போ நிறுவனம் சர்வதேச காப்புரிமை அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தது. 33 பக்கங்கள் அடங்கிய விண்ணப்பத்தில் செல்பி கேமரா தொழில்நுட்பம் எவ்வாறு இயங்கும் என்பதை ஒப்போ விளக்கி உள்ளது. 



அதன்படி ஸ்லைடிங் செல்பி கேமரா கொண்டு வெவ்வேறு கோணங்களில் புகைப்படங்களை எடுக்க முடியும் என ஒப்போ தெரிவித்து இருக்கிறது. காப்புரிமை விவரங்களின்படி இந்த அம்சம் கொண்ட ஸ்மார்ட்போனில் சிறிய மோட்டார் பொருத்தப்படும் இது கேமராவை ஒரு இடத்தில் இருந்து ஸ்லைடு செய்யும். 

இந்த மோட்டார், தற்போதைய பாப்-ரக செல்பி கேமராக்களை போன்றே, பயனர் ஸ்மார்ட்போனில் செல்பி கேமரா அம்சத்தை இயக்கினால் மட்டுமே செயல்படும் வகையில் உருவாக்கப்படுகிறது. தற்சமயம் காப்புரிமை நிலையில் இருக்கும் புது அம்சம் வர்த்தக ரீதியிலான ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
Tags:    

Similar News