ஆன்மிகம்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் முக கவசம் அணிந்தபடி பக்தர்கள் அம்மனை வணங்கிய போது எடுத்த படம்.

சமயபுரத்தில் மாரியம்மனை தரிசனம் செய்ய திரண்ட பக்தர்கள்

Published On 2020-10-12 08:25 GMT   |   Update On 2020-10-12 08:25 GMT
சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்ய பக்தர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.
அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். இக்கோவிலுக்கு திருச்சி மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் செவ்வாய், ஞாயிறு, புதன், வெள்ளி போன்ற நாட்களிலும், அமாவாசை, பவுர்ணமி போன்ற தினங்களிலும் ஏராளமான பக்தர்கள் கார் மற்றும் வேன்களில் சமயபுரம் வருவார்கள்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஏராளமான பக்தர்கள் சமயபுரம் வந்திருந்தனர். அவர்கள் கோவில் முன்புறமும் மற்றும் தீபம் ஏற்றும் இடத்திலும் தீபம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் வழிபட்டனர். அதை தொடர்ந்து, அம்மனை தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரையும் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்தும், கைகளில் சானிடைசர் தெளித்த பிறகும், முக கவசம் அணிந்த பக்தர்களை கோவில் பணியாளர்கள் உள்ளே அனுமதித்தனர் அதை தொடர்ந்து பக்தர்கள் அம்மனை பயபக்தியுடன் வணங்கிச் சென்றனர்.

பக்தர்களின் கூட்டத்தை பயன்படுத்திக் கொண்டு சமூக விரோதிகள் திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபடாமல் தடுக்கும் வகையில் சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News