செய்திகள்
மைக்கேல் வாகன்

நியூசி. பாகிஸ்தான் தொடர் ரத்து: என்ன செய்திருக்க வேண்டும்? - மைக்கேல் வாகன் சொல்லும் யோசனை

Published On 2021-09-19 19:12 GMT   |   Update On 2021-09-19 19:12 GMT
கடைசி நேரத்தில் போட்டியை ரத்து செய்வதற்கு பதிலாக அமீரகத்துக்கு போட்டியை மாற்றி இருக்கலாம் என மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்
லண்டன்:

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடர் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இதனால் களம் இறங்காமலேயே நியூசிலாந்து அணியினர் நாடு திரும்பினர். 

நியூசிலாந்து அணி கடைசி நேரத்தில் தொடரை ரத்து செய்ததை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள், நிர்வாகிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

இதற்கிடையே, இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் செய்து 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்நிலையில், கிரிக்கெட் போட்டிகளை ரத்து செய்வதற்கு பதிலாக அமீரகத்துக்கு மாற்றி இருக்கலாம் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மைக்கேல் வாகன் தனது டுவிட்டர் பக்கத்தில், இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு பயணம் செய்வது பாதுகாப்பற்றது என்று கருதினால் சுற்றுப்பயணத்தை ரத்து செய்வதற்கு பதிலாக ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு மாற்ற முயற்சிப்பது புத்திசாலித்தனமாகத் தெரிகிறது.

முழு ரத்து செய்வதை விட ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கான விளையாட்டுகள் நடக்கலாம் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News