லைஃப்ஸ்டைல்
பெண்கள் அழகைக் கூட்டும் ஆடைகளை தேர்வு செய்வது எப்படி?

பெண்கள் அழகைக் கூட்டும் ஆடைகளை தேர்வு செய்வது எப்படி?

Published On 2019-11-18 06:32 GMT   |   Update On 2019-11-18 06:32 GMT
பெண்களில் ஒவ்வொருவரையும், ஒவ்வொரு வித ஆடை அழகுபடுத்தும்; இந்த பதிப்பில் பெண்கள் தங்கள் உடல் வாகுக்கு ஏற்றவாறு ஆடைகளை முக்கியமாக புடவைகளை தேர்வு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
பெண்களில் ஒவ்வொருவரையும், ஒவ்வொரு வித ஆடை அழகுபடுத்தும்; இந்த பதிப்பில் பெண்கள் தங்கள் உடல் வாகுக்கு ஏற்றவாறு ஆடைகளை முக்கியமாக புடவைகளை தேர்வு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஒல்லியாக இருக்கும் பெண்கள், இறுக்கமான ஆடைகளை அணியக்கூடாது; ஒல்லிப் பெண்கள், புடவை கட்டும் போது, ரவிக்கையும் இறுக்கமாக இல்லாமல் சற்றுத் தளர்வாக இருக்குமாறு அணிய வேண்டும்.

பருமனாக இருக்கும் பெண்கள், இறுக்கமாக உடையணிவது, உடல் பருமனைக் குறைத்துக் காட்டும்; பருமனான உடல்வாகு கொண்ட பெண்களுக்கு புடவை இள வண்ணமுடையதாக இருந்தால், ரவிக்கை சற்று அடர் வண்ணமுடையதாக இருக்க வேண்டும்.

புடவையின் வண்ணம் அடர்த்தியானதாக இருந்தால், ரவிக்கையானது மெல்லிய-இள வண்ணத்தில் இருக்க வேண்டும்; ஒரே நிறத்தில் புடவை, ரவிக்கை என்று இருக்குமாறு பார்த்து வாங்குவதை தவிர்த்து, இவ்வாறு அணிவது உங்கள் அழகை மேம்படுத்திக் காட்டும்.

சாதாரணமாக வெளியில், கடைகள் போன்ற இடங்களுக்கு போகும் போது, சிறிய பூக்கள் போட்ட இள வண்ணம் கொண்ட நைலான் புடவைகளை பயன்படுத்துவதும், கோவில், கடற்கரை போன்ற பொது இடங்களுக்கு செல்கையில், அடர் வண்ணம் கொண்ட காட்டன் புடைவைகள் பயன்படுத்துவதும் உங்கள்

உயரமாகவுள்ள பெண்கள், உங்கள் உயரத்தைக் குறைத்துக்காட்ட குறுக்காக கோடு போட்ட புடவைகளைத் தேர்ந்தெடுத்து அணிதல் வேண்டும்; குள்ளமான பெண்கள், உயரத்தைச் சற்று அதிகரித்துக்காட்ட நேர் வாக்கில் கோடு போட்ட புடவைகளைத் தேர்ந்தெடுத்து அணிதல் வேண்டும்.

புடவை கட்டுகையில், புடவையின் பார்டர் மற்றும் மடிப்புகள் எனும் ப்ளீட்ஸ் போன்றவை உங்கள் உடல்வாகுக்கு ஏற்றவாறு இருக்குமாறு எடுத்து உடுத்த வேண்டும்.
Tags:    

Similar News