தொழில்நுட்பம்
ரெட்மி கே30 ப்ரோ

விரைவில் இந்தியா வரும் ரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போன்

Published On 2020-09-01 06:56 GMT   |   Update On 2020-09-01 06:56 GMT
சியோமி நிறுவனத்தின் முதல் ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


சியோமி நிறுவனம் ரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போனினை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் குவால்காம் நிறுவனத்தின் 5ஜி சிப்செட் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

முன்னதாக இதே ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு வாக்கில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் 4ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் போக்கோ எக்ஸ்2 பெயரில் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. 



ரெட்மி கே30 5ஜி வேரியண்ட் ரெட்மி பிராண்டிங் கொண்டு இந்திய சந்தையில் சியோமி நிறுவனத்தின் முதல் 5ஜி ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி என ஒற்றை வேரியண்ட்டில் மட்டும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

மேலும் இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் ஃபிராஸ்ட் வைட் மற்றும் மிஸ்ட் பர்ப்பிள் என இரண்டு வித நிறங்களில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. 5ஜி வேரியண்ட்டில் ஸ்னாப்டிராகன் 765ஜி சிப்செட், 120 ஹெர்ட்ஸ் எல்சிடி டிஸ்ப்ளே, குவாட் கேமரா, 4500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட இருக்கிறது.
Tags:    

Similar News