ஆன்மிகம்
தாமிரபரணி அந்திய புஷ்கர விழா

நெல்லை தைப்பூச மண்டபத்தில் தாமிரபரணி அந்திய புஷ்கர விழா 1-ந்தேதி தொடங்குகிறது

Published On 2019-10-24 05:26 GMT   |   Update On 2019-10-24 05:26 GMT
அந்திய புஷ்கர விழா வருகிற 1-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நெல்லை சந்திப்பு கைலாசபுரம் தைப்பூச மண்டபத்தில் திருமுறை பாராயணம், வேத பாராயணத்துடன் விழா தொடங்குகிறது.
வேளாகுறிச்சி ஆதீனம் சத்யஞான மகாதேவதேசிய பரமாசாரிய சுவாமி, செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச தேசிக சுவாமி ஆகியோர் நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

விருச்சிக ராசிக்கு உரிய நதியாக தாமிரபரணி உள்ளது. கடந்த ஆண்டு குருபகவான் விருச்சிக ராசியில் பிரவேசித்த காலத்தையொட்டி மகா புஷ்கர விழா நடைபெற்றது. அதன் நிறைவாக அந்திய புஷ்கர விழா நடைபெற இருக்கிறது. வருகிற 1-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நெல்லை சந்திப்பு கைலாசபுரம் தைப்பூச மண்டபத்தில் திருமுறை பாராயணம், வேத பாராயணத்துடன் விழா தொடங்குகிறது.

புனித நீராடல், கைலாசநாதர் கோவிலில் கணபதி ஹோமம் ஆகியவையும் நடைபெறுகிறது. அன்று மாலை தாமிரபரணி ஆற்றுக்கு சிறப்பு ஆரத்தி காண்பிக்கப்படுகிறது. 2-ந் தேதி பல்வேறு வகையான பூஜைகள், வழிபாடுகள், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகின்றன. 3-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணிக்கு தாமிரபரணிக்கு பெருமை சேர்த்தவர்களுக்கு விருதுகள், நினைவு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

இதில் காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரசுவதி சுவாமி மற்றும் மடாதிபதிகள், வைணவ ஜீயர்கள் கலந்து கொள்கின்றனர். 4-ந் தேதி காலை 6.30 மணிக்கு அந்திய புஷ்கர நீராடுதலுடன் விழா நிறைவு பெறுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

அப்போது, தாமிரபரணி புஷ்கர விழாக்குழு உஷாராமன், செல்லையா, உமையொருபாகம் குருக்கள் மடம் இளைய மடாதிபதி உமா மகேசுவரன், ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி. மாசானமுத்து, திருப்பதி ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News