ஆட்டோமொபைல்

பஜாஜ் பல்சர் NS200 அட்வென்ச்சர் எடிஷன் அறிமுகம்

Published On 2018-02-27 10:24 GMT   |   Update On 2018-02-27 10:24 GMT
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புதிய பல்சர் NS200 அட்வென்ச்சர் எடிஷன் இஸ்தான்புல் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
துருக்கி:

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புதிய NS200 அட்வென்ச்சர் எடிஷன் இஸ்தான்புல் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய பல்சர் NS200 பல்வேறு காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும், மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

ஒட்டுமொத்த வடிவமைப்பில் பஜாஜ் பல்சர் NS200  காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. புதிய பல்சர் NS200 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளில் கிரிள், நக்கிள் கார்டு, இன்ஜின் பேஷ் பிளேட் மற்றும் ஆக்சில்லரி லைட்கள் வழங்கப்பட்டுள்ளது. 

புதிய காஸ்மெடிக் மாற்றங்கள் வாகனத்தின் தோற்றத்தை முரட்டுத்தனமாக வெளிப்படுத்துகிறது. இத்துடன் முன்பக்க கௌல் மற்றும் ரேடியேட்டரில் அலுமினியம் பிட் வழங்கப்பட்டிருப்பது வாகனத்தின் தோற்றத்தை மேலும் வித்தியாசப்படுத்துகிறது.



பஜாஜ் பல்சர் NS200 அட்வென்ச்சர் எடிஷனுடன் சேடிள் பேக் அல்லது பேணியர் ஃபிரேம் வழங்கப்படுகிறது. இதனால் புதிய மோட்டார்சைக்கிளில் லக்கேஜ் வைத்துக் கொள்வது எளிமையானதாகிறது. இதன் பில்லன் கிராப் ரெயில் ட்வீக் செய்யப்பட்டு கூடுதல் பெட்டியை வைக்கும் வசதியை வழங்குகிறது. இத்துடன் ஹேன்டிள்பாரில் நேவிகேஷன் சாதனம் வைக்கப்பட்டிருக்கிறது.

பல்சர் NS200 மாடலில் 200சிசி சிங்கிள்-சிலிண்டர், ஃபியூயல் இன்ஜெக்டெட், லிக்விட்-கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 24 பி.ஹெச்.பி. பவர், 18.6 என்.எம். டார்கியூ மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மற்ற மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

புதிய பஜாஜ் பல்சர் NS200 அட்வென்ச்சர் எடிஷனில் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு சக்கரங்களிலும் சிங்கிள்-சேனல் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர மற்ற அம்சங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

புகைப்படம்: நன்றி surmeklazim
Tags:    

Similar News