செய்திகள்
கோப்புபடம்.

திருப்பூர் மாவட்டத்தில் நாளை 4 - ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் - 81,120 பேருக்கு செலுத்த இலக்கு

Published On 2021-10-02 09:47 GMT   |   Update On 2021-10-02 09:47 GMT
672 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை7 மணி வரை முகாம் நடைபெற உள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 20,77,095 உள்ளனர். 

இதுவரை 15,05,290 நபர்களுக்கு முதல் தவணையும், 3,62,823 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 5,71,805 நபர்களுக்கு முதல் தவணையும், 57,297 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியுள்ளது.

முதற்கட்டமாக 12.9.2021 அன்று நடைபெற்ற முகாமில் 1,23,163 பேர்களும், இரண்டாம்கட்டமாக 19.9.2021 அன்று நடைபெற்ற முகாமில் 89,379 பேர்களும், மூன்றாம்கட்டமாக 26.09.2021 அன்று நடைபெற்ற முகாமில் 78,974 பயனடைந்துள்ளார்கள். மேலும் நான்காம் கட்டமாக நாளை 3-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மொத்தம் 81,120 நபர்களுக்கு தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கோவிட்-19 சிறப்பு தடுப்பூசி முகாம், 631 நிலையான முகாம்களிலும், 41 நடமாடும் முகாம்கள் என 672 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை7 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாம்கள் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதாரநிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டசத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள்,பஞ்சாயத்து அலுவலகங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், டோல்கேட் மற்றும் தனியார் மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் கோவிட் - 19 தடுப்பூசி மருந்து இலவசமாகவழங்கப்படவுள்ளது. 

இப்பணிக்காக பல்வேறு துறைகளை சார்ந்த 2, 688 பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடவுள்ளனர். இதற்கு தேவையான மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.  
Tags:    

Similar News