செய்திகள்
வைரல் புகைப்படம்

வைரலாகும் பிரதமர் மோடியின் புகைப்படம் உண்மையா?

Published On 2019-12-03 06:49 GMT   |   Update On 2019-12-03 06:49 GMT
பிரதமர் நரேந்திர மோடி உணவு உண்ணும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதன் உண்மை பின்னணியை பார்ப்போம்.



பிரதமர் நரேந்திர மோடி உணவு உண்பது போன்ற புகைப்படமும், பெண்மணி ஒருவர் பசியில் வாடும் தனது குழந்தையுடன் அமர்ந்து இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதில் குழந்தையுடன் அமர்ந்து இருக்கும் பெண் இந்தியாவை சேர்ந்தவர் என கூறப்பட்டுள்ளது.

இந்த புகைப்படம் ஞானமுள்ளவர்களுக்கு ஆயிரம் அர்த்தங்களை கொடுக்கும் எனும் தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. இதனை இதுவரை பல்லாயிரக்கணக்கானோர் உண்மையென நம்பி பகிர்ந்துள்ளனர்.

புகைப்படத்தை ஆய்வு செய்ததில், பிரதமர் மோடியின் புகைப்படம் போட்டோஷாப் மூலம் மாற்றப்பட்டு இருப்பதும் மற்றொரு புகைப்படத்தில் குழந்தையுடன் அமர்ந்து இருக்கும் பெண் ஆப்ரிக்காவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்திருக்கிறது.

எனினும், புகைப்படம் உண்மையென நம்பியவர்கள் பிரதமர் மோடியை சாடும் வகையிலான கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். இரண்டு புகைப்படங்களையும் தனித்தனியே தேடியதில் உண்மை விவரம் வெளியானது.



அதன்படி பிரதமர் மோடியின் புகைப்படம் நவம்பர் 12, 2008-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் காந்தி நகர் செய்தியாளர்கள் சார்பில் வழங்கப்பட்ட தீபாவளி விருந்தின் போது எடுக்கப்பட்டதாகும். இதன் உண்மை புகைப்படத்தில் பிரதமர் உட்கொள்ளும் உணவு வகைகள் குறைவாகவே இருக்கிறது.

மற்றொரு புகைப்படத்தில் இருக்கும் பெண்மணி இந்தியாவை சேர்ந்தவர் என பலரும் நம்பிய நிலையில், இந்த பெண் ஆப்ரிக்காவை சேர்ந்தவர் என உறுதியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை டேவிட் டன்லி என்பவர் 1992-ம் ஆண்டு எடுத்திருக்கிறார். அந்தவகையில் வைரல் புகைப்படம் முற்றிலும் பொய் என உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
Tags:    

Similar News