ஆன்மிகம்
கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலை மண்டபத்தின் எழில்மிகு தோற்றத்தை படத்தில் காணலாம்.

துறவிக்காடு பால சுப்பிரமணியசுவாமி கோவில் குடமுழுக்கு விழா நாளை நடக்கிறது

Published On 2021-02-24 08:14 GMT   |   Update On 2021-02-24 08:14 GMT
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலத்தை அடுத்துள்ள துறவிக்காடு பாலசுப்பிரமணியசுவாமி கோவில் குடமுழுக்கு விழா நாளை(வியாழக்கிழமை) நடக்கிறது.
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலத்தை அடுத்துள்ள துறவிக்காடு கிராமத்தில், பாலசுப்பிரமணியசுவாமி கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலை புதிதாக நிர்மானிக்க கிராம மக்கள் முடிவு செய்தனர். அதனை தொடர்ந்து திருப்பணி குழு அமைக்கப்பட்டு, பல லட்சம் ரூபாய் செலவில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் கட்டப்பட்டுள்ளது.

திருப்பணி வேலைகள் அனைத்தும் நிறைவு பெற்றதை தொடர்ந்து, கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் நேற்று தொடங்கியது. தொடர்ந்து இன்று(புதன்கிழமை) 2-ம் மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெறுகின்றன. நாளை(வியாழக்கிழமை) காலை 4-வது கால யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து காலை 9

மணிக்கு மேல் 9.30 மணிக்குள் பாலசுப்பிரமணியசுவாமிக்கும், அதன் பரிவார தெய்வங்களுக்கும் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. பின்னர் மூலவருக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெறுகிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News