உடற்பயிற்சி
சின் முத்திரை

மனோமய கோசம் - சின் முத்திரை

Published On 2022-02-24 02:35 GMT   |   Update On 2022-02-24 02:35 GMT
புத்தி மயகோசம், நன்றாக இயங்க யோகாசனங்கள் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் நாளமில்லா சுரப்பிகள் சரியாக சுரக்கும் புத்தி கூர்மையுடன் செயல்பட முடியும்.

விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். இரு கால்களையும் நீட்டவும். ஒவ்வொரு காலாக மடித்து இடது காலை வலது தொடை மேலும், வலது காலை இடது தொடை மீதும் போடவும். இரு கைகளையும் சின் முத்திரையில் வைக்கவும். பெருவிரலை ஆள்காட்டி விரல் நுனியில் இணைக்கவும், மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும் பத்து முறைகள். பின் உங்களது மனதை நெற்றிப் புருவ மையத்தில் கூர்ந்து ஐந்து நிமிடங்கள் மூச்சோட்டதை தியானிக்கவும்.

இந்த பத்மாசனத்தில் சின் முத்திரை செய்யும் பொழுது மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள், சோம்பல், பொறாமை, பயம், பேராசை, வெறுப்பு போன்ற பண்புகள் ஒழிகின்றது. நம்பிக்கை வளரும், அன்பு மலரும், எதையும் சாதிக்கலாம் என்ற எண்ணம் வளரும். பய உணர்வு நீங்கும் . தெளிந்த சிந்தனை பிறக்கும். எப்பொழுதும் மனம் உற்சாகமாக இருக்கும்.

யோகக் கலைமாமணி
பி.கிருஷ்ணன் பாலாஜி M.A.(Yoga)
63699 40440
Tags:    

Similar News