செய்திகள்
மின்சார ரெயில் சேவை

ஞாயிற்றுக்கிழமைகளில் மின்சார ரெயில் சேவை 419 ஆக அதிகரிப்பு

Published On 2021-06-26 19:43 GMT   |   Update On 2021-06-26 19:43 GMT
கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் மின்சார ரெயில் சேவை அதிகரிக்கப்பட்டு, பொதுமக்களும் பயணிக்க தெற்கு ரெயில்வே அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை:

கொரோனா ஊரடங்கால் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் குறைந்த அளவில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் 98 மின்சார ரெயில் சேவைகளே இயக்கப்பட்டன. இந்தநிலையில் நேற்று முன்தினம் முதல் சென்னையில் மின்சார ரெயில் சேவை அதிகரிக்கப்பட்டு, பொதுமக்களும் பயணிக்க தெற்கு ரெயில்வே அனுமதி அளித்தது.

அந்தவகையில் ஞாயிற்றுக்கிழமை மின்சார ரெயில் சேவையும் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மின்சார ரெயில் சேவை அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி மூர்மார்க்கெட்-அரக்கோணம் இடையே 149 மின்சார ரெயில் சேவையும், மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி இடையே 66 மின்சார ரெயில் சேவையும், கடற்கரை-செங்கல்பட்டு இடையே 138 மின்சார ரெயில் சேவையும், கடற்கரை-வேளச்சேரி இடையே 50 சேவைகளும், ஆவடி, பட்டாபிராம்-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே 16 சேவைகளும் என 419 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News