செய்திகள்
முககவசம்

வாக்களிக்க வருபவர்கள் முககவசம் அணிவது கட்டாயம்

Published On 2021-04-05 10:46 GMT   |   Update On 2021-04-05 10:46 GMT
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 11 மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்து சென்று வாக்களிக்கலாம்.
மதுரை:

வாக்களிக்க வருபவர்கள் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. மதுரை மாவட்டத்திலும் இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனவே வாக்காளர்கள் அனைவரும் இந்திய தேர்தல் ஆணையம் வழங்கி உள்ள வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையினை எடுத்து சென்று வாக்களிக்க வேண்டும்.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 11 மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்து சென்று வாக்களிக்கலாம். மேலும், வாக்களிக்க வரும் வாக்காளர்கள், வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்கள், வாக்குச்சாவடி முகவர்கள் ஆகியோர் முககவசம் அணிந்து வர வேண்டும்.

அதுபோல், சமூக இடைவெளியையும் கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான அன்பழகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags:    

Similar News