செய்திகள்
கோப்பு படம்

மகனின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க போலி பிறப்பு சான்று கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் மீது வழக்கு

Published On 2019-11-05 11:34 GMT   |   Update On 2019-11-05 11:34 GMT
கோவை அருகே மகனின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க போலி பிறப்பு சான்று கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது.
கோவை:

கோவை சாய்பாபா காலனி கே.கே.புதூரை சேர்ந்தவர் சுரேஷ் ராஜ்(வயது 52).

இவர் கோவையில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மகனுக்கு ஏற்கனவே பாஸ்போர்ட் வாங்கி இருந்தார். தற்போது அந்த பாஸ் போர்ட்டை புதுப்பிப்பதற்காக கோவை அவினாசி சாலையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வந்தார்.

பின்னர் அங்கு பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்கு விண்ணப்பங்ளை பூர்த்தி செய்து அதிகாரிகளிடம் கொடுத்தார். அதனை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது பாஸ்போர்ட்டில் அவரது மகன் பிறந்த வருடம் 2001 என இருந்தது.

ஆனால் தற்போது கொடுத்த அவரது மகனின் பிறப்பு சான்றிதழில் பிறந்த வருடம் 2002 என இருந்தது. இதனால் அலுவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.இதுகுறித்து பாஸ்போர்ட் அலுவலக சூப்பிரண்டு அசோகன் இதுகுறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் கொடுத்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தூத்துக்குடி மாநகராட்சியில் தனது மகனுக்கு பிறந்த சான்றிதழை போலியாக வாங்கியதும், அதனை பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்காக கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News