லைஃப்ஸ்டைல்
பெண்கள் எளிமையான மேக்கப் போடுவது எப்படி?

பெண்கள் எளிமையான மேக்கப் போடுவது எப்படி?

Published On 2020-02-13 05:34 GMT   |   Update On 2020-02-13 05:34 GMT
சிலர் எளிமையான மேக்கப்பையே செய்ய நினைப்பார்கள். சிம்பிளாக இருந்தாலும் அழகாக தெரிய வேண்டும் என எண்ணுவார்கள். அவர்களுக்கான டிப்ஸ் தான் இது.
பெண்கள் மேக்கப் செய்வதை மிக விருப்புவார்கள். அதிலும் சிலர் எளிமையான மேக்கப்பையே செய்ய நினைப்பார்கள். சிம்பிளாக இருந்தாலும் அழகாக தெரிய வேண்டும் என எண்ணுவார்கள். அவர்களுக்கான டிப்ஸ் தான் இது.

* முதலில் ஆடையை வைத்தே உங்களை நிர்ணயம் செய்வார்கள். உங்களுக்கு ஏற்ற உடைகளை நீங்கள் அணிந்து கொள்ளலாம். எந்த உடல் வாக்காக இருந்தாலும், தங்களுக்கு சவுகரிகமாகவும், வசதியாகவும் இருக்கும் ஆடைகளையே பெண்கள் விரும்புவார்கள்.

புடவை, சூடி, ஜீன்ஸ், டாப்ஸ், மிடி, பெலாசோ, லெக்கின்ஸ் என பெண்களின் உடைகளை சொல்லிக்கொண்டே போகலாம். காலத்திற்கு தகுந்தாற்போலவும், நாகரிக வளர்ச்சிக்கு ஏற்றாற் போல் கலாச்சாரமும் மாறிக்கொண்டுதான் வருகிறது. அதனால் நீங்கள் செல்லும் இடத்திற்கு ஏற்ற மாதிரி உடையை தேர்ந்தெடுக்க வேண்டும்.

கோவில் மற்றும் விசேஷங்களுக்கு சென்றால் நல்ல வண்ணமயமான உடைகளை அணியலாம். ஆனால் வேளைக்கு செல்லும் போது, உங்கள் தொழிலுக்கு தகுந்த மாதிரி சிம்பிளான உடைகளை நீங்கள் அணியலாம்.

* சிம்பிளான மேக்கப்பிற்கு காஜல் கண்டிப்பாக இருக்க வேண்டும். இது உங்கள் முகத்தை இன்னும் அழகாவும், எடுப்பாகவும் காண்பிக்கும். காஜல் அணிந்தால் பெண்கள் இன்னும் அழகாக தெரிவார்கள். ஆண்களும் தாங்கள் விரும்பும் பெண் சிம்பிளான மேக்கப்பில் இருக்க வேண்டும் என்றே நினைப்பர்.

* ஐ-ப்ரோ செய்தாலே உங்களுடைய முகம் கவர்ச்சிகரமாக மாறிவிடும். இது பெண்களுக்கு கூடுதல் அழகை சேர்க்கும். உங்களுடைய முகத்திற்கு தகுந்த ஐ-ப்ரோ ஷேப்பை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். அது உங்களுக்கு நல்ல லுக்கை கொடுக்கும். வட்ட முகம், நீள முகம் என ஒவ்வொரு முகத்திற்கும் வட்ட வடிவம், லைட் ஐ-ப்ரோ, தின் ஐ-ப்ரோ என பல வகைகள் உள்ளது.

* லிப்ஸ்டிக் முகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகும். உங்கள் நிறத்திற்கும், தோல் அமைப்பிற்கும் தகுந்தமாதிரி நீங்கள் லிப்ஸ்டிக்கை தேர்ந்தெடுக்கலாம். மேட், லைட் ஷாடோ என லிப்ஸ்டிக்கிலும் பலவகைகள் உள்ளது. சிம்பிளான மேக்கப் செய்ய குறைந்த வண்ணம் உடைய லிப்ஸ்டிக்குகளை நீங்கள் உபயோகிக்கலாம்.

* முடிவடிவமைப்பு கண்டிப்பாக உங்கள் ஆடைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அது உங்களுக்கு நல்ல லுக்கை கொடுக்கும். சுடிதார் அணிந்தால் தலை பின்னிக் கொள்ளலாம். மாடர்ன் உடைகள் அணியும் போது பிரீ-ஹேர் விடுவது நன்றாக இருக்கும். 
Tags:    

Similar News