செய்திகள்
ரஷியாவில் இருந்து வந்த விமானம்

ரஷியாவில் இருந்து 2 விமானங்களில் அனுப்பிய மருத்துவ உதவி பொருட்கள் வந்து சேர்ந்தன

Published On 2021-04-29 03:56 GMT   |   Update On 2021-04-29 03:56 GMT
இந்திய-ரஷிய கூட்டுறவின் அடிப்படையில் கொரோனாவை எதிர்கொள்ள இந்தியாவுக்கு ரஷியா கணிசமான உதவிகளை வழங்கும் என வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நிலையில், பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ளன. ரஷியாவும், இந்தியாவுக்கு உதவுவதாக அறிவித்தது.

“இந்திய-ரஷிய கூட்டுறவின் அடிப்படையில் கொரோனாவை எதிர்கொள்ள இந்தியாவுக்கு ரஷியா கணிசமான உதவிகளை வழங்கும். இதற்காக ரஷிய அவசர சேவைகளுக்கான விமானத்தை இந்தியாவுக்கு அனுப்ப ரஷிய தலைமை முடிவு செய்துள்ளது” என்று ரஷிய வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.



அதன்படி, கொரோனாவை கட்டுப்படுத்த உதவும் மருந்துகள், 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 75 வென்டிலேட்டர்கள், 150 மானிட்டர்கள் மற்றும் பிற தேவையான மருத்துவ பொருட்கள் என மொத்தம் 22 மெட்ரிக் டன் எடையுள்ள பொருட்கள் 2 விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டன. அந்த இரண்டு விமானங்களும் இன்று அதிகாலையில் டெல்லி வந்து சேர்ந்தன. 

அந்த பொருட்கள் அனைத்தையும் உடனடியாக இந்தியாவிற்குள் அனுமதித்து, விநியோகம் செய்வதற்கு உடனடியாக அனுமதி வழங்கப்பட்டதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் மற்றும் சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News