செய்திகள்
கோப்புப்படம்

மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்ற 12 பேர் கைது - 1,473 மதுபாட்டில்கள் பறிமுதல்

Published On 2021-05-15 18:18 GMT   |   Update On 2021-05-15 18:18 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்ற 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1,473 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி:

தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் தலைமையிலான தனிப்படையினர் நேற்று முன்தினம் செல்வநாயகபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதற்காக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த திரவியபுரம் 1-வது தெருவைச் சேர்ந்த சண்முகம் மகன் செல்வம், கிருஷ்ணராஜபுரம் சூடாமணி மகன் விஜய் செல்வின் மற்றும் அண்ணாநகரைச் அருணாச்சலம் மகன் பொன்னுச்சாமி ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 960 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

அதே போன்று திருச்செந்தூர் காய்கறி மார்கெட் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் தலைமையிலான தனிப்படையினர் ரோந்து சென்றனர். அப்போது சட்ட விரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த திருச்செந்தூரை சேர்ந்த ஆறுமுகம் மகன் ரவிக்குமார் என்ற சோடாரவி மற்றும் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவை சோந்த பண்டாரம் மகன் வைகுண்டம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 419 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் தூத்துக்குடி மத்தியபாகம், தருவைக்குளம், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி மதுவிலக்கு பிரிவு மற்றும் கோவில்பட்டி மதுவிலக்கு பிரிவு ஆகிய காவல் நிலையங்களுக்கு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டதில் மது விற்பனை செய்த 7 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 94 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News