ஆன்மிகம்
காவடி

உடல் நலக்குறைவு, குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களை தீர்க்கும் காவடி

Published On 2021-02-23 07:53 GMT   |   Update On 2021-02-23 07:53 GMT
குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்கள் நீங்கவும், உடல் நலக்குறைவு நீங்கி நலம் பெறவும் பக்தர்கள் முருகப்பெருமானுக்கு காவடி எடுத்து பழனிக்கு வருகின்றனர்.
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம்படை வீட்டுக்கு தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதில் காவடி அதிகம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. காவடி என்பது தோளில் சுமந்து சென்று நேர்த்திக்கடனை குறிப்பிடுவதால் அந்த பொருட்களின் அடிப்படையில் பெயர் பெற்றுள்ளது. பால் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடி, வேல் காவடி, எண்ணெய் காவடி, மச்சக்காவடி, சர்ப்ப காவடி என்பன அந்தந்த நேர்த்திக்கடன் பொருட்களின் அடிப்படையில் பெயர் பெற்றவையாகும்.

அதேபோல் சுமந்து வரும் முறையிலும் அதன் பெயர் மாறுபடுகிறது. அதாவது அலகுக்காவடி, அக்னி காவடி, பறவை காவடி, ரதக்காவடி போன்றவை பக்தர்கள் எடுத்து வரும் முறையை பொறுத்து பெயர் பெற்றதாக உள்ளது. குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்கள் நீங்கவும், உடல் நலக்குறைவு நீங்கி நலம் பெறவும் பக்தர்கள் முருகப்பெருமானுக்கு காவடி எடுத்து பழனிக்கு வருகின்றனர். குறிப்பாக தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய திருவிழா நாட்களில் அதிகளவு பக்தர்கள் காவடி எடுத்து வருகின்றனர்.
Tags:    

Similar News