செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வருகிற 27-ந்தேதி மரக்காணம் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2021-10-24 08:38 GMT   |   Update On 2021-10-24 08:38 GMT
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் ‘இல்லம் தேடி கல்வி’ என்ற புதிய திட்டத்தை வருகிற 27-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.
சென்னை:

கொரோனா தொற்றின் காரணமாக மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகள் நேரடியாக நடைபெறாமல் இருந்தது. இதனால் மாணவர்களிடம் கற்றல் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை நீக்குவதற்கு நடப்பு கல்வியாண்டிற்கான பட்ஜெட்டில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இல்லம் தேடி கல்வி என்ற புதிய திட்டத்தின் கீழ், மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை தீர்க்கவும், 1 முதல் 8-ம் வகுப்புகள் வரையான மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாரத்திற்கு ஒரு நாள், 1 மணி முதல் 2 மணி நேரம் வரை 1.70 லட்சம் தன்னார்வலர்களைக் கொண்டு, திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

விழுப்புரம், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நீலகிரி, கடலூர், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது.

இதை விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் வரும் 27-ந் தேதி முதல்- அமைச்சர் மு. க. ஸ்டாலின் நேரடியாக சென்று திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அதனை தொடர்ந்து 6 மாதம் மாணவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் கற்பிக்கப்பட உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.


Tags:    

Similar News