ஆன்மிகம்
சபரிமலைக்கு செல்ல முடியாததால் திருச்சியில் ஐயப்ப பக்தர்கள் இருமுடி பிரிப்பு

சபரிமலைக்கு செல்ல முடியாததால் திருச்சியில் ஐயப்ப பக்தர்கள் இருமுடி பிரிப்பு

Published On 2020-12-23 08:07 GMT   |   Update On 2020-12-23 08:07 GMT
ஐயப்ப பக்தர்களில் பலர் திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் தங்களது இருமுடியை களைந்து அபிஷேகத்திற்கான நெய்யை வழங்கி வருகிறார்கள்.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக துளசி மாலை அணிந்து விரதம் இருந்து வரும் ஐயப்ப பக்தர்கள் அனைவரும் சபரிமலைக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. ஆன்-லைன் மூலம் முன்பதிவு செய்த ஐயப்ப பக்தர்கள் தினமும் 2 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

அதற்கும் கொரோனா தொற்று இல்லை என்கிற சான்றிதழ் சமர்ப்பிக்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு விதிமுறைகள் உள்ளன. இதன் காரணமாக ஐயப்ப பக்தர்களில் பலர் திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் தங்களது இருமுடியை களைந்து அபிஷேகத்திற்கான நெய்யை வழங்கி வருகிறார்கள்.

திருச்சி மட்டும்இன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருவதால் திருச்சி ஐயப்பன்கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இங்கு இருமுடி களைந்து விரதம் முடிப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதுவரை 1,622 ஐயப்ப பக்தர்கள் இருமுடி பிரித்து விரதத்தை முடித்து இருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஜனவரி மாதம் 17-ந்தேதி வரை திருச்சி ஐயப்பன் கோவிலில் இருமுடி களையலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News