ஆன்மிகம்
ராஜகோபுரம் முன்பு சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், விழா குழுவினருடன் பார்வையிட்ட போது எடுத்த படம்.

கவுமார மடாலய கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 25-ந்தேதி நடக்கிறது

Published On 2021-02-20 08:11 GMT   |   Update On 2021-02-20 08:11 GMT
கவுமார மடாலய கோவிலில் வருகின்ற 25-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
கோவையை அடுத்துள்ள சின்னவேடம்பட்டி பகுதியில் கவுமார மடாலயம் என வழங்கப்பெறும் சிரவை ஆதினம் 130 வருடங்களுக்கு முன்பு ராமானந்த சுவாமிகளால் நிறுவப்பட்டது. இங்கு புகழ்வாய்ந்த மடாலயம் கோவில் உள்ளது. இங்கு கடந்த 1987-ம் ஆண்டில் 3-வது ஆதினம் சுந்தர சுவாமிகளின் தலைமையில் 108 ஆண் யானைகள் கொண்ட கஜபூஜை உலகப்பெருவேள்வியாக நடைபெற்றது.

சிரவை ஆதினத்தின் 4-வது குருமகா சன்னிதானமாக கடந்த 1994-ம் ஆண்டு முதல் குமரகுருபர சுவாமிகள் சிறப்பாக தொடர்ந்து வருகிறார். வருகின்ற 25-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

விழாவில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி, பி.ஆர்.நடராஜன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வி.சி.ஆறுக்குட்டி, பி.ஆர்.ஜி அருண்குமார், அம்மன் அர்ச்சுனன் மற்றும் குமரகுரு கல்லூரி தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர், நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ்.பி.அன்பரசன், பா.ஜ.க.தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் முக்கிய பல்வேறு ஆதினங்களும், அருளாளர்களும், கலந்து கொள்கின்றனர்.
Tags:    

Similar News