ஆன்மிகம்

கன்னியாகுமரி திருப்பதி கோவிலில் 65 நாட்களில் 3 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2019-04-03 08:51 GMT   |   Update On 2019-04-03 08:51 GMT
கன்னியாகுமரி திருப்பதி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து நேற்றுடன் 65 நாட்கள் ஆகி உள்ள நிலையில் இதுவரை 3 லட்சம் பக்தர்கள் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்து உள்ளனர்.
கன்னியாகுமரி விவேகானந்தபுரம் கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பிரமாண்டமாக திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது.

இந்த கோவிலில் கடந்த ஜனவரி மாதம் 27-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அன்று முதல் இந்த கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கும்பாபிஷேகம் நடந்து நேற்றுடன் 65 நாட்கள் ஆகி உள்ள நிலையில் இதுவரை 3 லட்சம் பக்தர்கள் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்து உள்ளனர்.

நேற்றும் இங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று ஒரே நாளில் 5 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்கள் நீண்ட வரிசையில் அமர வைக்கப்பட்டனர். அதன்பிறகு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது கோடை விடுமுறை தொடங்கி உள்ளதால் வெளி மாவட்டங் களில் இருந்து அதிக அளவில் திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

கன்னியாகுமரிக்கு வரும் வெளிநாட்டு மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகளும் திருப்பதி கோவிலுக்கு அதிகமாக வந்து செல்கிறார்கள்.
Tags:    

Similar News