வழிபாடு
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்பத்திருவிழா 4-ந்தேதி தொடக்கம்

Published On 2022-01-28 08:14 GMT   |   Update On 2022-01-28 08:14 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெப்பத்திருவிழா வருகிற 4-ந்தேதி தொடங்குகிறது. முக்கிய திருநாளான தெப்பத்திருவிழா 8-ம் நாளான 11-ந் தேதி நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் திருப்பள்ளி ஓடம் திருநாள் எனப்படும் தெப்பத்திருவிழா வருகிற பிப்ரவரி மாதம் 4-ந்தேதி தொடங்கி 12-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபம் அருகே நேற்று முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையடுத்து முகூர்த்தக்காலின் நுனியில் சந்தனம் மற்றும் மங்களப்பொருட்கள் அணிவிக்கப்பட்டு மந்திரங்கள் ஓதி புனிதநீர் தெளிக்கப்பட்டது. அதன் பின்னர் முகூர்த்தக்காலை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி, சுந்தர்பட்டர் மற்றும் ஊழியர்கள் நேற்று பகல் 12.30 மணியளவில் நட்டனர்.

தெப்பத்திருவிழாவின் முதல் நாளான 4-ந்தேதி ஹம்ச வாகனத்திலும், 5-ந் தேதி அனுமந்த வாகனத்திலும், 6-ந்தேதி கற்பகவிருட்ச வாகனத்திலும், 7-ந்தேதி வெள்ளி கருட வாகனத்திலும், 8-ந் தேதி இரட்டை பிரபை வாகனத்திலும், 9-ந்தேதி யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளுகிறார்.

திருவிழாவின் 7-ம் நாளான 10-ந்தேதி நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளுகிறார். முக்கிய திருநாளான தெப்பத்திருவிழா 8-ம் நாளான 11-ந் தேதி நடைபெறுகிறது. 9-ம் திருநாளான 12-ந் தேதி ஒற்றை பிரபை வாகனத்தில் பந்த காட்சி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Tags:    

Similar News