செய்திகள்
விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கர் தொடர்புடைய 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை

Published On 2021-10-22 03:21 GMT   |   Update On 2021-10-22 03:21 GMT
சேலம் தரண் மருத்துவமனையின் மருத்துவர் செல்வராஜா வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்துகின்றனர்.
சென்னை:

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய 4 பேரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் 3 இடங்களிலும், சேலத்தில் ஒரு இடத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

கடந்த 18-ந்தேதி  ஒத்துழைப்பு இல்லாததாலும், வீடு, அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால் 4 இடங்களிலும் சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் சீல் வைக்கப்பட்ட 4 இடங்களிலும் நீதிமன்ற அனுமதி பெற்று பூட்டை உடைத்து சோதனை நடைபெறுகிறது.

* சென்னை நந்தனத்தில் உள்ள விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனின் வீட்டில் சோதனை

* ஆயிரம் விளக்கில் உள்ள நண்பர் சந்திரசேகரின் சாஸன் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் சோதனை

* சென்னை அண்ணாநகரில் உள்ள விஜயபாஸ்கரின் உதவியாளர் முருகன் வீட்டில் சோதனை

* சேலம் தரண் மருத்துவமனையின் மருத்துவர் செல்வராஜா வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்துகின்றனர்.



Tags:    

Similar News