தொழில்நுட்பச் செய்திகள்
போக்கோ எம்4 ப்ரோ

33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்தியாவில் அறிமுகமான போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்

Published On 2022-02-15 09:28 GMT   |   Update On 2022-02-15 09:28 GMT
போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை வரும் பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்கோ நிறுவனம் தனது போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்துள்ளது. 

இது கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். இதுதவிர ரெட்மி நோட் 11 மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் ஆகும். 

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி  ஆண்ட்ராய்டு 11-னை அடிப்படையாக கொண்ட MIUI 12.5-ல் இயங்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆகும். இந்த போன் 6.6 இன்ச் ஃபுல் ஹெச்.டி+ டாட் டிஸ்ப்ளேவுடன் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. மேலும் இந்த டிஸ்ப்ளேயில் 240Hz டச் சாம்ப்ளிங் ரேட், DCI-P3 வைட் கலர் காமுட் அடங்கியுள்ளது.

இத்துடன் இந்த போனில் ஆக்டோ கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 810 எஸ்.ஓ.சி மற்றும் 8 ஜி.பி LPDDR4X ரேம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

கேமராவை பொறுத்தவரை f/1.8 லென்சுடன் 50 எம்.பி பிரைமரி சென்சார் கொண்ட டூயல் கேமரா, 8 எம்.பி அல்ட்ரா ஒய்ட் கேமரா, f/2.45 லென்ஸ் கொண்ட 16 எம்.பி செல்ஃபி கேமரா ஆகியவை தரப்பட்டுள்ளன.



போக்கோ எம்4 ப்ரோ 5ஜியில் 128 ஜிபி யூ.எப்.எஸ் 2.2 ஸ்டோரேஜுடன் 1 டி.பி வரையிலான மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட் தரப்பட்டுள்ளது. இந்த போனில் 5ஜி, 4ஜி LTE, Wi-fi, ப்ளூடூத் வி5.1, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ஐ.ஆர், டைப் சி யூ.எஸ்.பி, 3.5 எம்.எம் ஹெட்போன் ஜேக், பக்கவாட்டில் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் ஆகியவையும் அடங்கியுள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 33 வாட் ப்ரோ பாஸ்ட் சார்ஜிங் வசதியையும், 5000 mAh பேட்டரியையும் கொண்டுள்ளது.

விலையை பொறுத்தவரை 4 ஜி.பி+64 ஜி.பி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.14,999-ஆகவும், 6 ஜிபி+128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.16,999-ஆகவும், 8 ஜி.பி+128 ஜி.பி வேரியண்டின் விலை ரூ.18,999-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த போக்கோ எம்4 ப்ரோ 5ஜி கூல் ப்ளூ, போக்கோ யெல்லோ, பவர் பிளாக் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. 

இந்த போன் பிப்ரவரி 22-ம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News