செய்திகள்

மதத்தின் பெயரால் ஓட்டு வேட்டை - கேரளாவில் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. தகுதிநீக்கம்

Published On 2018-11-09 08:52 GMT   |   Update On 2018-11-09 08:52 GMT
மதத்தின் பெயரால் வாக்கு சேகரித்து வெற்றிபெற்ற முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.வை தகுதிநீக்கம் செய்து கேரளா ஐகோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது. #KeralaHC #IUMLMLAdisqualified
திருவனந்தபுரம்:

கேரள மாநில சட்டசபைக்கு கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆழிக்கோடு தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்டவர் கே.எம்.ஷாஜி. தன்னை எதிர்த்து போட்டியிட்ட இடதுசாரி கூட்டணி வேட்பாளரான நிக்கேஷ் குமாரைவிட கூடுதலாக  2,287 வாக்குகள் வாங்கி ஷாஜி வெற்றி பெற்றார்.



அவரது வெற்றியை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் நிக்கேஷ் குமார் வழக்கு தொடர்ந்தார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறிய வகையில், ‘முஸ்லிமல்லாத வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்’ என துண்டு பிரசுரங்களை வெளியிட்டு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்திய ஷாஜியை சட்டசபையில் இருந்து தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்ற அவரது கோரிக்கை தொடர்பாக ஐகோர்ட் விசாரித்து வந்தது.

இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி பி.டி.ராஜன் ஷாஜியை ஆறாண்டுகளுக்கு தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார். இதுதொடர்பான உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு  கேரள சட்டசபை சபாநாயகர் மற்றும் அம்மாநில தேர்தல் அதிகாரிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பை எதிர்த்து முஸ்லிம் லீக் கட்சி மேல்முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. #KeralaHC #IUMLMLAdisqualified
Tags:    

Similar News