செய்திகள்
வாக்குச்சீட்டு

நெல்லை மாவட்டத்தில் 11 மணி நிலவரப்படி 22.89 சதவீத ஓட்டுப்பதிவு

Published On 2021-10-09 07:16 GMT   |   Update On 2021-10-09 07:16 GMT
தென்காசி மாவட்டத்தில் காலை 9 மணி நிலவரப்படி 11.74 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் காலை 9 மணி நிலவரப்படி 6.59 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. அதிகபட்சமாக களக்காடு யூனியனில் 10.50 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. நாங்குநேரி யூனியனில் 7.93 சதவீதமும், வள்ளியூர் யூனியனில் 6.5 சதவீதமும், ராதாபுரம் யூனியனில் குறைந்த அளவாக 4.17 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்தது.

11 மணி நிலவரப்படி களக்காடு யூனியனில் 23.89 சதவீதமும், நாங்குநேரி யூனியனில் 23.47 சதவீதமும், ராதாபுரம் யூனியனில் 23.85 சதவீதமும், வள்ளியூர் யூனியனில் 20.98 சதவீதம் என மொத்தம் 22.89 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.

தென்காசி மாவட்டத்தில் காலை 9 மணி நிலவரப்படி 11.74 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக குருவிகுளம் யூனியனில் 14.25 சதவீதமும், தென்காசி யூனியனில் 11.68 சதவீதமும் பதிவாகி உள்ளது. குறைந்தபட்சமாக செங்கோட்டை யூனியனில் 8.59 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. 11 மணி நிலவரப்படி 26.67 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News