செய்திகள்
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.

உத்தரபிரதேச சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2020-10-14 08:54 GMT   |   Update On 2020-10-14 08:54 GMT
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் தாழ்த்தப்பட்ட பட்டியலினத்தை சேர்ந்த பெண், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விழுப்புரம்:

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் தாழ்த்தப்பட்ட பட்டியலினத்தை சேர்ந்த பெண், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், அவரது குடும்பத்திற்கு நீதி வேண்டியும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறவும் சென்ற முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தி தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், அப்பெண்ணை கொலை செய்தவர்களை தண்டிக்கக்கோரியும், இந்திய பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும் நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில் விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு சார்பில் விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட எஸ்.சி. பிரிவு தலைவர் சுரேஷ்ராம் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவா முன்னிலை வகித்தார். அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் கிறிஸ்டோபர் திலக் கண்டன உரையாற்றினார்.

இதில் எஸ்.சி. பிரிவு மாநில துணைத்தலைவர் செந்தமிழ்செல்வன், பெரம்பலூர் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், விழுப்புரம் மாவட்ட துணைத்தலைவர்கள் ராஜ்குமார், விஸ்வநாதன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் சேகர், காஜாமொய்தீன், விழுப்புரம் நகர இளைஞரணி நிர்வாகி செல்வம், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் ராஜமாணிக்கம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு துணைத்தலைவர் அய்யனார், மனித உரிமைகள் பிரிவு தலைவர் சரவணன், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் கனகராஜ், மாணவர் காங்கிரஸ் தலைவர் உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் விழுப்புரம் நகர தலைவர் சதீஷ் நன்றி கூறினார்.
Tags:    

Similar News