செய்திகள்
கோப்புபடம்.

விவசாயிகளுக்கு ஆதரவாக 'பந்த்’ 2 நாட்கள் விழிப்புணர்வு பிரசாரம்

Published On 2021-09-20 08:33 GMT   |   Update On 2021-09-20 08:33 GMT
விவசாயிகளுக்கு ஆதரவாக வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரி 27-ந்தேதி தேசிய அளவிலான பந்த் நடக்கிறது.
திருப்பூர்:

மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி வருகிற 27-ந்தேதி தேசிய அளவிலான ‘பந்த்’ நடக்க உள்ளது. 

இதுகுறித்து ஆலோசிக்க அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு கூட்டம் திருப்பூர் சி.ஐ.டி.யு., அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் உண்ணிகிருஷ்ணன் தலைமை வகித்தார். 

சங்க பிரதிநிதிகள் ரங்கராஜ் (சி.ஐ.டி.யு.,), அன்பு (மோட்டார் சங்கம்), சேகர் ( ஏ.ஐ.டி.யு.சி.,), நடராசன் (துப்புரவு தொழிலாளர் சங்கம்), ரங்கசாமி (எல்.பி.எப்.,), மனோகரன் (எம்.எல்.எப்.,), பெருமாள் (ஐ.என்.டி.யு.சி.,), முத்துசாமி (எச்.எம்.எஸ்.,) உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

கூட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரி 27-ந்தேதி தேசிய அளவிலான பந்த் நடக்கிறது. அதற்காக 23, 24-ந் தேதிகளில் விழிப்புணர்வு பிரசாரம் செய்வது, துண்டு அறிக்கை வெளியிடுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூர் மாவட்டத்தின் 7 இடங்களில் மறியல் போராட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. 
Tags:    

Similar News