செய்திகள்
அமெரிக்கா துப்பாக்கிச்சூடு

அமெரிக்கா துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழப்பு

Published On 2019-12-11 01:44 GMT   |   Update On 2019-12-11 01:44 GMT
அமெரிக்காவில் நியூஜெர்சியில் 2 இடங்களில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரி உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் நியூஜெர்சியில் இருவேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியாகினர். சூப்பர் மார்க்கெட் உள்பட 2 இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்திய 2 பேரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

நியூஜெர்சி நகரின் செமின்ட்ரி பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் அதிகாரி ஒருவர் பலியானார். அதே பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியானதாக நியூஜெர்சி நகர போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என கூறப்படுவதால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Tags:    

Similar News