உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

மலைவாழ் கிராமங்களில் கால்நடை சிகிச்சை முகாம்

Published On 2022-05-07 10:19 GMT   |   Update On 2022-05-07 10:19 GMT
சிகிச்சை, குடற்புழு நீக்கம், தடுப்பூசி, செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சை, தாதுஉப்பு கலவை உள்ளிட்டவை இலவசமாக அளிக்கப்பட்டுள்ளது.
உடுமலை:

உடுமலை பகுதியில் விவசாயத்திற்கு அடுத்த படியாக கால்நடைத் தொழில் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. இதேபோல ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்களில் உள்ள தளிஞ்சி, மஞ்சம்பட்டி, கோடந்தூர் உள்ளிட்ட மலைவாழ் கிராம குடியிருப்புகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இதனால் அங்கு கால்நடைத்துறையால் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடத்தி உரிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதில் சிகிச்சை, குடற்புழு நீக்கம், தடுப்பூசி, செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சை, தாதுஉப்பு கலவை உள்ளிட்டவை இலவசமாக அளிக்கப்பட்டுள்ளது. 

உடுமலை கால்நடை பராமரிப்பு உதவி இயக்குனர் ஜெயராம் கூறுகையில், மலைவாழ் கிராம குடியிருப்புகளில் பால் உற்பத்தி மற்றும் இயற்கை உரத்துக்காக கால்நடைகள் வளர்ப்பில் ஈடுபடுகின்றனர். காலநிலைக்கு ஏற்ப கால்நடை வளர்த்தலுக்கு உரிய ஆலோசனையும் அளிக்கப்படுகிறது. அதன்படி அப்பகுதிகளில் சிறப்பு முகாம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது  என்றார். 
Tags:    

Similar News