செய்திகள்
கோப்புபடம்.

உடுமலை ரவுண்டானா அழகுப்படுத்தப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Published On 2021-11-21 07:53 GMT   |   Update On 2021-11-21 07:53 GMT
சுற்றுலாத்துறை மற்றும் நகராட்சி இணைந்து ரவுண்டானாவை அழகுபடுத்த ஆய்வுப்பணி மேற்கொள்ளப்பட்டது.
உடுமலை:

உடுமலை ராஜேந்திரா ரோடு சந்திப்பில் ரூ. 2 கோடி செலவில் சிக்னல் இல்லாத ரவுண்டானா இரு ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்டது. 

இந்தநிலையில் ரவுண்டானாவில் பெயிண்ட் அடித்தல், சுற்றிலும் தடுப்பு கம்பிகள், மண் கொட்டிய பகுதிகளில் செடி, புற்கள் அமைத்தல் உள்ளிட்ட அழகுப்படுத்தும் பணி என பணி முழுமையடையாமல் உள்ளது. அதே போல் ரவுண்டானா மற்றும் ராஜேந்திரா ரோடு, பழநி ரோடு மையத்தடுப்புகளில் ஏற்கனவே இருந்த சிக்னல் கம்பங்கள், இரும்பு தடுப்புகள், மின் கம்பங்கள், வயர்கள் அகற்றப்படாமல் அவல நிலையில் உள்ளது. 

இதனை அழகுபடுத்துவது குறித்து அதிகாரிகள் கண்டு கொள்ளாத நிலையில் சுற்றுலாத்துறை மற்றும் நகராட்சி இணைந்து அழகுபடுத்த ஆய்வுப்பணி மேற்கொள்ளப்பட்டது. 

ஆனால் அப்பணியும் மேற்கொள்ளாமல் நகரின் மத்தியில் ரவுண்டானா அவல நிலையில் உள்ளது. 

எனவே அதனை அழகுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News