செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு மக்கள்தான் வாரிசு- முதலமைச்சர்

Published On 2020-12-18 05:56 GMT   |   Update On 2020-12-18 08:44 GMT
சேலம் மாவட்டத்தில் 100 இடங்களில் மினி கிளினிக் அமைக்கப்பட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சேலம்:

சேலம் பனமரத்துப்பட்டி அருகே வாணியம்பாடி கிராமத்தில் அம்மா மினி கிளினிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அதன்பின்னர் அவர் கூறியதாவது:

* சேலம் மாவட்டத்தில் 100 இடங்களில் மினி கிளினிக் அமைக்கப்பட உள்ளது.

* ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதற்காகவே மினி கிளினிக் திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது.

* கொரோனா தடுப்புப்பணிக்காக மாவட்டந்தோறும் சென்று நேரடியாக ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகிறேன்.

* வீரபாண்டி பிரிவில் ரூ.45 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.

* எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு வாரிசு கிடையாது. 2 பேருக்கும் மக்கள்தான் வாரிசு.

* அதிமுக அரசு நேரடியாக மக்களோடு பேசி வருகிறது.

*  பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டங்களுக்கு அதிமுக அரசு முக்கியத்துவம் அளிக்கிறது.

* வீடியோ கான்பரன்சிங் முறையில் பேசும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசை விமர்சித்து வருகிறார்.

மக்களை சந்திப்பது பெரிதா? அல்லது வீட்டிலேயே உட்கார்ந்து பேசுவது பெரிதா? என்று முதலமைச்சர் கேள்வி எழுப்பினார்.


Tags:    

Similar News