செய்திகள்
நீட் தேர்வு

நீட் தேர்வு பாதிப்பு குறித்து கருத்துகளை தெரிவிக்கலாம்

Published On 2021-06-17 05:53 GMT   |   Update On 2021-06-17 05:53 GMT
நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தில் மாணவர்களிடத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் நீட் தேர்வின் தாக்கம், நீட் தேர்வுக்கு பதிலாக மாற்று வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக்குழுவை அமைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தில் மாணவர்களிடத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பாக பொதுமக்களிடமும் கருத்து கேட்கப்படுகிறது.

பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை 5 பக்கங்களுக்கு மிகாமல் அஞ்சல் வழி மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ மருத்துவ கல்வி இயக்குனரகத்தில் வைக்கப்பட்டுள்ள தனிப்பெட்டியில் வருகிற 23-ந் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மின்னஞ்சல் முகவரி: neetimpact2021@gmail.com இதை மருத்துவ கல்வி இயக்ககத்தின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News