தொழில்நுட்பம்

இந்தியாவின் முன்னணி 4ஜி மொபைல் போன் நிறுவனம் இது தான்

Published On 2019-04-05 04:55 GMT   |   Update On 2019-04-05 04:55 GMT
2018 ஆம் ஆண்டு இந்தியாவின் முன்னணி 4ஜி மொபைல் போன் நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ இருந்ததாக சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #RelianceJio



இந்தியாவில் 4ஜி சாதனங்களின் விற்பனை கடந்த ஆண்டு மட்டும் 50 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. ஒட்டுமொத்த சந்தையில் 4ஜி சாதனங்கள் மட்டும் 64 சதவிகிதம் என சைபர் மீடியா ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

4ஜி சேவை கொண்ட சாதனங்களின் விற்பனை 60 சதவிகிதம் கடந்திருக்கும் நிலையில், 4ஜி டேப்லெட்கள் 44 சதவிகிதமாக இருந்ததாக சைபர் மீடியா ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

"இந்தியாவில் 4ஜி சாதனங்கள் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 4ஜி மொபைல் போன் மற்றும் 4ஜி டேப்லெட் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது," என சைபர் மீடியா ஆய்வு நிறுவன தலைவர் பிரபு ராம் தெரிவித்தார். 



2018 ஆம் ஆண்டு முழுக்க விற்பனையான மொத்த டேட்டா கார்டுகள் 100 சதவிகிதம் 4ஜி திறன் கொண்டவையாகும். ரிலையன்ஸ் ஜியோ, சியோமி மற்றும் சாம்சங் நிறுவனங்கள் முன்னணி 4ஜி மொபைல் போன் நிறுவனங்களாக இருக்கிறது. இந்நிறுவனங்கள் முறையே 33 சதவிகிதம், 20 சதவிகிகம் மற்றும் 17 சதவிகித பங்குகளை கொண்டிருக்கிறது. 

ரிலையன்ஸ் ஜியோவின் 4ஜி மொபைல் சாதனங்களில் ஜியோபோன் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது. 4ஜி டேப்லெட்கள் பிரிவில் லெனோவோ, சாம்சங் மற்றும் ஐபால் நிறுவனங்கள் முறையே 40 சதவிகிதம், 26 சதவிகிதம் மற்றும் 14 சதவிகித பங்குகளை பெற்றிருந்தன.

சைபர் மீடியா ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி 2024 ஆம் ஆண்டு 4ஜி தொழில்நுட்ப பயன்பாடு 80 சதவிகிதத்தை தாண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி 2025 ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை 14 கோடியை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News