லைஃப்ஸ்டைல்
குழந்தைகளின் சுத்தம் பற்றி பெற்றோர் அறிந்து கொள்ள வேண்டியவை

குழந்தைகளின் சுத்தம் பற்றி பெற்றோர் அறிந்து கொள்ள வேண்டியவை

Published On 2020-12-03 06:28 GMT   |   Update On 2020-12-03 06:28 GMT
குழந்தைகளை நன்கு சுத்தமாக பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது. பெற்றோர்கள் குழந்தைகளின் சுத்தம் பற்றிய ஒருசில அடிப்படைகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
இந்த நவீன உலகத்தில் என்னதான் குழந்தைகளாக இருந்தாலும், சுத்தமாக இருந்தால் தான் அனைவருக்கும் பிடிக்கும். அதனால் தான் குழந்தைகளை நன்கு சுத்தமாக பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது. சில புதிய பெற்றோர்கள் குழந்தைகளை மென்மையாக பட்டுப் போன்று பார்த்துக் கொள்வார்கள்.

பெற்றோர்கள் குழந்தைகளின் சுத்தம் பற்றிய ஒருசில அடிப்படைகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. உதாரணமாக, இந்த காலத்தில் வீட்டிற்கு யாரேனும் வந்தால், அப்போது குழந்தைகளை தூக்கும் போது, குழந்தை அவர்கள் மீது சிறுநீர் கழித்துவிட்டால், பின்னர் மறுமுறை அவர்கள் குழந்தையை தூக்கவே யோசிப்பார்கள். எனவே இந்த மாதிரியான எண்ணம் மற்றவர்களுக்கு வராமலிருக்க, குழந்தைகளுக்கு எப்போதும் டயப்பரை அணிவிக்க வேண்டும்.

இதுப் போன்ற ஒருசில அடிப்படைகளை அனைத்து பெற்றோர்களும் தெரிந்து கொள்ள வேண்டும். இப்போது அந்த அடிப்படைகளை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

குழந்தைகளின் கால்கள் மற்றும் கைகளில் உள்ள நகங்களை வெட்டுவது என்பது மிகவும் கடினமான செயல். ஆனால் கடினம் என்று நினைத்துவிட்டு விடாமல், பொறுமையுடன் அவர்களின் கை மற்றும் கால்களில் உள்ள நகங்களை அடிக்கடி வெட்டிவிட வேண்டும்.

குழந்தைகளுக்கு பற்கள் முளைக்க ஆரம்பிக்கும் போதே, அவர்களுக்கு பற்களை ஒரு நாளைக்கு இரண்டு முறை துலக்கும் பழக்கத்தை பழக்கிவிட வேண்டும். வேண்டுமெனில் ஆரம்பத்தில் அவர்களுக்கு ‘பேபி மௌத் வாஷ்’ கூட பயன்படுத்தலாம்.

குழந்தைகளின் முடியானது எப்போதும் ஒரே போன்று இருப்பதில்லை. அவர்கள் செய்யும் சுட்டித்தனத்திற்கு முடி பேய் போன்று வந்துவிடும். ஆகவே அவர்களுக்கு சரியான ஹேர் ஸ்டைலில் கூந்தலை வெட்டி விட்டு, பராமரித்தால், அழகாக இருக்கும்.

குழந்தை தானே என்று வாரத்திற்கு ஒரு முறை குளிப்பாட்டும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டாம். ஏனெனில் இது குழந்தையின் ஆரோக்கியத்தைப் பொறுத்தது. எனவே குளிர்காலமாக இருந்தால், வாரத்திற்கு மூன்று முறையும், கோடை காலமாக இருந்தால், தினமும் குளிப்பாட்ட வேண்டும்.

குழந்தைகளின் உடலில் இருந்து துர்நாற்றம் வராது என்று நினைக்கிறீர்களா? ஆம். ஆனால் அவர்கள் மீது பால் வாடை வரும். எனவே அவர்கள் பால் குடித்ததும், அவர்களின் வாய், கை போன்றவற்றை கழுவி, பின் பேபி பவுடரை போட்டு விட வேண்டும்.

குழந்தைகளின் அழகைக் கெடுக்கும் வகையில் இருக்கும் பெரிய உடைகளை அணிவிக்க வேண்டாம். இவை குழந்தைகளின் அழகை கெடுத்துவிடும். எனவே அவர்களுக்கு நல்ல பொருத்தமான, வறட்சியான உடைகளை அணிவிக்க வேண்டும்.

குழந்தைக்கு கூந்தல் குறைவாகத் தான் உள்ளது என்று அவர்களுக்கு தலை சீவாமல் இருக்க வேண்டாம். தினமும் மறக்காமல் சீவி விட வேண்டும். இதனால் அவர்களுக்கு கூந்தல் நன்கு வளரும்.

குழந்தைகள் சாப்பிடும் போது அவர்களது கழுத்திற்கு மறக்காமல், துணியை கட்டிவிட்டு, பின் உணவை ஊட்ட வேண்டும். இதனால் அவர்கள் மற்றும் அவர்களது உடை அழுக்காகாமல் தடுக்கலாம்.

குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லும் போது மறக்காமல் கால்களுக்கு ஷூக்களை அணிவிக்க வேண்டும். இதனால் அவர்களை எந்த ஒரு கிருமிகளும் தாக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.

குழந்தைகளுக்கு சருமம் மென்மையாக இருக்கும். ஆனால் மென்மையாகத் தானே உள்ளது என்று சாதாரணமாக இருக்கக்கூடாது. அவர்களுக்கு தினமும் பேபி லோசனை உடலில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

குழந்தைகள் தூங்கும் போதும் அல்லது எங்கேனும் வெளியே செல்லும் போதும் டயப்பரை அணிவித்து அழைத்து செல்ல வேண்டும். அதுமட்டுமின்றி யாரேனும் வீட்டிற்கு வந்தாலும், குழந்தைகளுக்கு அணிவித்திருப்பது நல்லது.
Tags:    

Similar News