தொழில்நுட்பம்
ரியல்மி ஸ்மார்ட்போன்

கொரோனா பாதிப்பு காரணமாக ரியல்மி எடுத்த அதிரடி முடிவு

Published On 2021-04-29 09:49 GMT   |   Update On 2021-04-29 09:49 GMT
ரியல்மி பிராண்டு இந்திய சந்தையில் புதிய எக்ஸ்7 மேக்ஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருந்தது.


ரியல்மி நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ரியல்மி எக்ஸ்7 ப்ரோ இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டில் கடும் போட்டியை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக சியோமி, விவோ, ஐகூ போன்ற பிராண்டுகள் இந்த பிரிவில் பல்வேறு மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றன.



இந்தியாவில் கொரோனாவைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை காரணம் காட்டி ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டை ஒத்திவைக்க ரியல்மி முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை ரியல்மி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறது. இதோடு மே 4 ஆம் தேத நடைபெற இருந்த ரியல்மி ஆண்டுவிழா நிகழ்வும் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

கொரோனாவைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் இந்தியாவில் கடுமையாக இருக்கிறது. இந்த சூழலில் குடும்பமாக இணைந்து மக்களுக்கு உதவ வேண்டும் என ரியல்மி தெரிவித்து உள்ளது. ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் 5ஜி வெளியீடு பற்றி ரியல்மி வேறு எந்த தகவலையும் வழங்கவில்லை.

Tags:    

Similar News