செய்திகள்
திருவாரூர் ரெயில் நிலையத்தில், லாரியில் இருந்து தொழிலாளர்கள் அரிசி மூட்டைகளை சரக்கு ரெயிலில் ஏற்றியபோது

பொதுவினியோக திட்டத்துக்கு 2,500 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது

Published On 2021-05-05 17:53 GMT   |   Update On 2021-05-05 17:53 GMT
திருவாரூரில் இருந்து விருத்தாசலத்துக்கு பொது வினியோக திட்டத்துக்கு சரக்கு ரெயிலில் 2 ஆயிரத்து 500 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல் மாவட்டத்தில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு அனுப்பி அரிசி மூட்டைகளாக தயாரானது. இந்த அரிசி மூட்டைகள் பொதுவினியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சரக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இதன்படி நேற்று திருவாரூரை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அரிசி மூட்டைகள் லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு லாரிகளில் இருந்து அரிசி மூட்டைகளை தொழிலாளர்கள் சரக்கு ரெயில் பெட்டிகளில் ஏற்றினர். பின்னர் 42 பெட்டிகளில் ஏற்றப்பட்ட 2 ஆயிரம் 500 டன் அரிசி பொதுவினியோக திட்டத்துக்கு கடலூர் மாவட்டம் விருத்தாசலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Tags:    

Similar News