செய்திகள்
தபால் நிலையம்.

ராயம்பாளையத்தில் தபால் நிலையம் - பொதுமக்கள் மனு

Published On 2021-11-19 08:02 GMT   |   Update On 2021-11-19 08:02 GMT
அவிநாசி பேரூராட்சி ராயம்பாளையத்தில் 300-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
அவினாசி:

அவிநாசி அருகே ராயம்பாளையம் பகுதியில் புதிதாக தபால் நிலையம் அமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அவிநாசி தபால் நிலையத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

அவிநாசி பேரூராட்சி ராயம்பாளையத்தில் ஜே.வி.கார்டன், கிரீன் பார்க், அவிநாசி நியூ டவுன், லட்சுமி நகர், சக்தி நகர், அபிராமி கார்டன், ருக்மா கார்டன், சக்தி நகர், ரங்கா நகர், வைஷ்ணவி கார்டன், அய்யப்பா கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்வசித்து வருகின்றனர். மேலும் 300-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ராயம்பாளையத்துக்கு உள்பட்ட பகுதி மக்களுக்காக அருகாமையில் செயல்பட்டு வரும் கைகாட்டிப்புதூர் தபால் நிலையத்துக்கு மாற்றாக ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கருக்கன்காட்டுப்புதூர் தபால் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

இதனால் முதியோர் உதவித்தொகை பெறுதல் உள்ளிட்ட பல்வேறு தபால் சேவைகளுக்காக பொதுமக்கள் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மக்களின் தேவையையும், நலனையும் கருத்தில் கொண்டு ராயம்பாளையத்தில் புதிதாக தபால் நிலையம் ஏற்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
Tags:    

Similar News