ஆன்மிகம்
கோவில் பணியாளர்கள் கொள்ளிடம் ஆற்றுக்கு சென்று புனிதநீர் எடுத்து வந்த காட்சி.

அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்

Published On 2020-07-30 05:23 GMT   |   Update On 2020-07-30 05:23 GMT
லால்குடியை அடுத்த அன்பில் கிராமத்தில் 108 வைணவ திவ்ய தேச திருத்தலங்களில் ஒன்றான சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது.
லால்குடியை அடுத்த அன்பில் கிராமத்தில் 108 வைணவ திவ்ய தேச திருத்தலங்களில் ஒன்றான சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சுந்தரராஜ பெருமாள், சுந்தரவல்லி நாச்சியாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான இந்த திருத்தலம் திருமழிசை ஆழ்வாரால் மங்களாசாசனம் பாடப்பெற்றது.

இந்த கோவிலில் ஆடி மாதம் விசாக நட்சத்திரத்தன்று அன்பில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்துவரப்பட்டு, ஜேஷ்டாபிஷேகம் நடைபெறும். அதன்படி, நேற்று பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள் கொள்ளிடம் ஆற்றுக்கு சென்று புனிதநீர் எடுத்து வந்து உற்சவருக்கு கோவில் மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து மூலவருக்கு 48 நாள் தைலக்காப்பு சாத்தி சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகிகள், பணியாளர்கள், அர்ச்சகர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News