செய்திகள்
காதல் ஜோடி

வடமாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி- நாகலாந்து போலீசாரிடம் ஒப்படைப்பு

Published On 2020-09-17 02:20 GMT   |   Update On 2020-09-17 02:20 GMT
ஊரடங்குக்கு முன்பாக வடமாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடியை போலீசார் மீட்டு தற்போது நாகலாந்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ஸ்ரீபெரும்புதூர்:

நாகலாந்து மாநிலத்தை சேர்ந்த 14 வயதான 9-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் மற்றும் சிறுமி காதலித்து வந்தனர். கொரோனா ஊரடங்குக்கு முன்பாக, அதாவது கடந்த மார்ச் மாதம் 9-ந்தேதி இரு வீட்டாருக்கும் தெரியாமல் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி தமிழகத்தில் தஞ்சம் அடைந்தனர். அவர்கள் மாயமானது குறித்து இரு வீட்டாரும் நாகலாந்து போலீசில் புகார் தெரிவித்தனர். அவர்களது செல்போன் சிக்னலை வைத்து அவர்கள் இருவரும் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து நாகலாந்து போலீசார் இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கடந்த மார்ச் மாதம் 18-ந் தேதி ஸ்ரீபெரும்புதூர் போலீசார் அவர்களை மீட்டு செங்கல்பட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

மனஅழுத்தத்தை குறைக்கும் வகையில் அவர்களுக்கு குழந்தைகள் நல குழு மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. நேற்று அவர்கள் இருவரும் ஸ்ரீபெரும்புதூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் முன்னிலையில் நாகலாந்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அப்போது செங்கல்பட்டு குழந்தைகள் நல குழு அலுவலர் மதியழகன், குழும தலைவர் ராமசந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News