ஆட்டோமொபைல்
டீடெல் ஈசி

ரூ. 19,999 விலையில் எலெக்ட்ரிக் மொபெட் இந்தியாவில் அறிமுகம்

Published On 2020-08-16 06:15 GMT   |   Update On 2020-08-15 12:39 GMT
டீடெல் நிறுவனத்தின் ஈசி எலெக்ட்ரிக் மொபெட் மாடல் இந்திய சந்தையில் மிகக்குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

டீடெல் நிறுவனம் இந்திய சந்தையில் ஈசி எனும் பெயரில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. ஒற்றை வேரியண்ட்டில் கிடைக்கும் டீடெல் ஈசி மொபெட் விலை ரூ. 19,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

புதிய டீடெல் ஈசி மொபெட் ஜெட் பிளாக், பியல் வைட் மற்றும் மெட்டாலிக் ரெட் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் கிடைக்கும் விலை குறைந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். புதிய ஸ்கூட்டரை இந்தியாவில் டீடெல் அதிகாரப்பூர்வ ஆன்லைன் விற்பனை தளம் மற்றும் பி2படா வலைதளங்களில் வாங்கிட முடியும். 



மேலும் இந்த ஸ்கூட்டரை வாங்குவோருக்கு பஜாஜ் ஃபின்சர்வ் மூலம் எளிய மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. விலை குறைந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சொந்த மாத தவணை முறையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்கூட்டரில் எல்இடி லைட்டிங், ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த ஸ்கூட்டரில் 250 வாட் ஹப்-மவுண்ட் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 48 வோல்ட் 12ஏஹெச் LiFePO4 பேட்டரி வழஙஅகப்படுகிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 60 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். மேலும் இதை முழுமையாக சார்ஜ் செய்ய ஏழு முதல் எட்டு மணி நேரங்கள் ஆகும்.
Tags:    

Similar News